ஊபர் நியூ ஜெர்ஸி அலுவலகம் | கோப்புப் படம் (ஏபி) 
இந்தியா

1,000 நகரங்கள், 68 நாடுகள்: இந்தியர்களின் அசத்தும் பயண விவரங்கள்!

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களில் ஊபர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வதாக தகவல்

DIN

68-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,000 நகரங்களில் இந்தியர்கள் ஓராண்டில் பயணம் மேற்கொண்டுள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையவழியில் டாக்ஸி சேவைகளை அளிக்கும் ஊபர் நிறுவனம் வெளியிட அறிக்கையில் கோடைக்காலம், பள்ளிகள் கல்லூரிகளில் விடுமுறையில் இருக்கும்போது வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் அதிகமாக பயணிக்கும் காலமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் அதிகம் பயணம் மேற்கொள்ளும் மாதம் 2023-ல் மே ஆகவும் 2022-ல் ஜூன் ஆகவும் இருந்ததாக ஊபர் தெரிவித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக இந்தியர்கள்- அனைத்துவித பயண எண்ணிக்கை சார்ந்த- பல சாதனைகளை முறியடித்து வருவதாக ஊபர் இந்தியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று ஊபர் சேவைகளை அதிகம் பயன்படுத்துபவர்களாக இந்தியர்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள அறிக்கை இந்தியாவுக்குள் காட்டிலும் வெளிநாடுகளில் 25 சதவிகிதம் தொலைவு அதிகமாக இந்தியர்கள் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அங்கு 21 வெவ்வேறு சேவைகளை இந்தியர்கள் முயற்சித்து பார்க்கின்றனர். இந்தாண்டு இன்னமும் விடுமுறை காலம் முடிவடையாததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என ஊபர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT