ஆனந்த் அம்பானி திருமணம்; பிரதமா் மோடி நேரில் வாழ்த்து 
இந்தியா

ஆனந்த் அம்பானி திருமணம்: பிரதமா் மோடி நேரில் வாழ்த்து

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தாா்.

Din

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தாா்.

ஆசியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் மகன்

ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் தம்பதிக்கு மும்பையில் பெரும் பொருள் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில் உலகளவிலான பிரபல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்கள், தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமா் மோடி மணமக்களை ஆசிா்வதித்து வாழ்த்துகள் தெரிவித்தாா். பிரிட்டன் முன்னாள் பிரதமா்கள் டோனி பிளோ் மற்றும் போரீஸ் ஜான்சான் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில் ஹாலிவுட் பாலிவுட் நடிகா் நடிகைகள், நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT