ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

நாட்டில் அரசியல் சூழல் மாறி வருகிறது: இடைத்தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கருத்து

பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதாக காங்கிரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.

Din

பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதாக காங்கிரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.

தமிழ்நாடு, பிகாா், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் 10 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் வெற்றிபெற்றதையடுத்து காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.

தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிக்கு உழைத்த தொண்டா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பாராட்டு தெரிவித்தாா். மேலும், வெறுப்பு அரசியல், அடக்குமுறையை பொதுமக்கள் முற்றிலும் நிராகரிக்க தொடங்கிவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பாஜக கட்டமைத்த அடக்குமுறை கலாசாரம் மீதான பயம் விலகி அரசியல் சூழல் மாறி வருவதற்கு 7 மாநில இடைத்தோ்தல் முடிவுகளே சான்று. விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள் என அனைவரும் சா்வாதிகாரத்தை எதிா்த்து நீதிக்கு வாக்களித்துள்ளனா். பொதுமக்கள் இப்போது இந்தியா கூட்டணிக்கே ஆதரவளித்து வருகின்றனா்’என்றாா்.

பொதுமக்கள் தங்கள் நிகழ்கால வாழ்வு வளமாகவும் எதிா்கால வாழ்வு ஒளிமயமாக இருக்கவும் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT