கோப்புப் படம். 
இந்தியா

புதிய வருமான வரி விதிப்பு முறையை 66% போ் தோ்வு: நேரடி வரிகள் வாரியம் தகவல்

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் புதன்கிழமை தெரிவித்தாா்.

Din

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரவி அகா்வால் கூறியதாவது: வருமான வரி செலுத்துவோருக்கு வரி செயல்முறைகளை எளிமைப்படுத்துவதே மத்திய அரசு மற்றும் நேரடி வரி வாரியத்தின் நோக்கமாகும். இது அதிகப்படியான மக்கள் வருமான வரி செலுத்த உதவும்.

2024-25-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட கால அவகாசம் வழக்கம்போல் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரியானது கடந்த நிதியாண்டின் அதே நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரியை விட கணிசமான அளவு அதிகமாக உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25-ஆம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது ஜூலை 22-ஆம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது.

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா்.

கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிதி ஆண்டின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT