கோப்புப்படம். 
இந்தியா

பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும் சோதனை வெற்றி

5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக புதன்கிழமை நடைபெற்றது.

Din

5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக புதன்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூமியின் வளிமண்டலத்துக்குள் உள்ள இலக்கை இடைமறித்து அழிக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை, விண்ணில் ஏவப்பட்டு புதன்கிழமை சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலம் சாண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, அனைத்து அம்சங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டது.

இந்தப் பரிசோதனை 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் உள்நாட்டு திறனை எடுத்துரைத்தது.

இந்தப் பரிசோதனை வெற்றிபெற்ற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT