இந்தியா

கங்கனாவை ஏன் அறைந்தேன்? : பெண் காவலர் விளக்கம்

போலியாக போராடுகிறார்கள் என கங்கனா கூறியதால் அறைந்தேன் என அறைந்த காவலர் பதில் அளித்துள்ளார்.

DIN

சண்டீகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை காவலர் குல்விந்தர் கவுர், பாலிவுட் நடிகையும் எம்.பியுமான கங்கனா ரணாவத்தை அறைந்ததற்கான விளக்கத்தை விசாரணையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குல்விந்தர் கவுர் விசாரணையில், பஞ்சாபில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளை கங்கனா அவதூறாக பேசியதாகவும் ரூ.200 வாங்கிக் கொண்டு விவசாயிகள் போல போலியாக போராடினார்கள் என அவர் கூறியதாகவும், அந்தப் போராட்டத்தில் தன்னுடைய தாயாரும் பங்கேற்றிருந்ததாக குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இவரின் இச்செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியே வருகின்றனர்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லி வந்தடைந்த கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT