கோப்புப் படம் 
இந்தியா

திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் பெண்ணிற்கு துப்பாக்கிச் சூடு

திருமணத்திற்கு ஏற்றுக் கொள்ளாததால் பெண்ணிற்கு துப்பாக்கிச் சூடு; துப்பாக்கியால் சுட்டவர் தற்கொலை

DIN

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது திருமண முன்மொழிவை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் தியோபந்த் பகுதியில் வசிக்கும் ராஜன் (26) என்பவர், பக்கத்து ஊரான தாஜ்புராவைச் சேர்ந்த 24 வயது பெண்ணைக் காதலித்துள்ளார். இருவரின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் அந்தப் பெண் ராஜனை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இதனால் கோபமுற்ற ராஜன், பெண்ணின் வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை, துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் கூடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்தப் பெண் இறந்து விட்டதாக நினைத்து, ராஜன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT