இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை: 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை..

DIN

மகாராஷ்டிரத்தின் தாணே, பால்கர் மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் கனமழை கொட்டுத்தீர்த்த நிலையில் அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பால்கரில் உள்ள சூர்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மானூரில் உள்ள பாலம் மூழ்கிய நிலையில் வாதா மற்றும் மானூர் இடையே செல்லமுடியாத நிலை உள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் விவேகானந்த் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நகரில் 35.51 மி.மீ மழை பெய்துள்ளது. நகரின் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

தாணே மாவட்டத்தில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 50.72 மிமீ மழை பெய்த நிலையில், இந்த பருவமழை காலத்திலும் நல்ல மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 228.93 மிமீ மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT