உதவியாளர்கள் தூக்கிச்செல்லும் எம்.பி., ராம் கோபால் யாதவ் / வெள்ளம் சூழ்ந்த அதிஷி இல்லம் 
இந்தியா

அதிஷி, சசிதரூர் இல்லங்களில் வெள்ளம்! மழை நீரில் இறங்காத எம்.பி.யை தூக்கிச் சென்ற ஊழியர்கள்!

தில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி இல்லத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

DIN

தில்லியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், மழைநீரில் இறங்காமல் காரில் ஏறுவதற்காக தனது உதவியாளர்களை தூக்கச் செய்து சென்றுள்ளார் சமாஜவாதி மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ்.

தனது இல்லத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்குவதால், அதில் கால் வைக்காமல் காரில் ஏறுவதற்காக தனது இல்லத்தில் பணிபுரிபவர்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் விமர்சித்து வருகின்றனர்.

தில்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் நீடித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று (ஜூன் 28) காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால், தில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி இல்லத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் பலரும் தில்லியில் தங்கியுள்ளனர்.

இதனிடையே சசிதரூர் தங்கியிருந்த வீட்டிலும் வெள்ளநீர் சூழ்ந்ததாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியது. நாடாளுமன்றத்திற்கு புறப்பட்ட அவர், மழைநீரில் கால் வைக்காமல் காரில் ஏறுவதற்காக தனது வீட்டில் பணிபுரிபவர்களை அழைத்துள்ளார். அவர்கள் தூக்கிக்கொண்டதால், கால் நனையாமல் காரில் ஏறி நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டார்.

இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

SCROLL FOR NEXT