இந்தியா

ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன்!

வோடஃபோன் நிறுவனம் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

DIN

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், வோடஃபோன், ஐடியாவின் 'வீ' நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

பீரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டண உயர்வு 10% முதல் 23% வரை இருக்கும், கட்டண உயர்வானது ஜூலை 4 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 நாள்களுக்கு ரூ.299 (தினம் 1.5 ஜிபி) லிருந்து ரூ. 349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 ஜிபி) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

டேட்டா ஆட் ஆன் சேவைகளில் ஒருநாளைக்கு 1 ஜிபி ரூ. 19 லிருந்து ரூ. 22 ஆகவும், 3 நாளைக்கு 6 ஜிபி ரூ. 39 லிருந்து ரூ. 48 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்றுமுன்தினம் முடிந்தது. 10 ஜிகா ஹெர்ட்சுக்கான அலைக்கற்றை ஏலத்தில், 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் இன்று வோடஃபோன், ஐடியாவின் 'வீ' நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT