இந்தியா

மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு

நாட்டின் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.

DIN

புதுதில்லி: சமூக மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.

பல்வேறு சமூக நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதில் மாநிலங்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 3 ஆவது தவணையாக ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது. தொடர்ந்து பிகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.11.157 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு ரூ.11,157, மேற்கு வங்கத்துக்கு ரூ.8,978 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.5,752 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.9564 கோடி, மணிப்பூருக்கு ரூ.1,018 கோடி, அருணாசலத்துக்கு ரூ.2,497 கோடி, அஸ்ஸாம் ரூ.4,446 கோடி, கோவா ரூ.549 கோடி, குஜராத் ரூ.4,943 கோடி, ஜார்காண்ட் ரூ.4,700 கோடி, கர்நாடகம் ரூ.5,183 கோடி, கேரளத்துக்கு ரூ.2,736 கோடி, மிசோரம் 7,11 கோடி, சிக்கிம் ரூ.551 கோடி என ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வாக மத்தியில் ஆளும் பாஜக அரசு விடுவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT