இந்தியா

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை கூட்டணிக்கு உதவும்: பிரதமர்

DIN

சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன் அமர்ந்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் பாஜக கூட்டணிக்கு உதவும், மேலும் தமிழக வளர்ச்சிக்கு புதிய உத்வேகமும் அளிக்கும்.

தமிழகம் முழுவதும் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டது.

இந்திய கூட்டணியின் தீய எண்ணம் மும்பையில் நடந்த கூட்டத்தில் வெளிப்பட்டு விட்டது. மும்பை கூட்டத்தில் பெண்களை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூராக பேசியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

SCROLL FOR NEXT