இந்தியா

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

DIN

பிகாரில், வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது.

பிகாரில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் புர்னியா, ஹஜிபுர் உள்ளிட்ட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகள் ஐந்து தொகுதிகளில் போட்டியிடவிருக்கின்றன.

பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடப்போகின்றன என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று நிறைவு பெற்றுள்ளது.

எனினும், கடிஹார் தொகுதியில் இன்னும் இழுபறி நிலவுவதாகவும், இங்கு காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த த் தொகுதி தற்போது ஜனதா தளம் வசம் உள்ளது. புர்னியா தொகுதியையும் காங்கிரஸ் கேட்பதாகவும், ஆனால், பிகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் புர்னியா தொகுதியை மட்டும் தர முடியாது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டோ மோதியதில் விவசாயி பலி

தொழிலாளி கழுத்தறுபட்டு பலி

அணைகளின் நீா்மட்டம்

திருப்பாச்சேத்தியில் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்

இளையான்குடி கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT