இந்தியா

ஆம் ஆத்மி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

DIN

கலால் வரிக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பாக தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில், நஜாப்கரைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், தில்லி போக்குவரத்து மற்றும் சட்ட அமைச்சராக உள்ள கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு முன்னதாக, கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், கவிதா ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

SCROLL FOR NEXT