இந்தியா

கார்கிலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு: முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 13) நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், 5-ஆம் கட்ட தேர்தலில், மே. 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள கார்கில் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் வாக்களிக்க வசதியாக, முதன்முறையாக நிகழாண்டு மக்களவை தேர்தலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளில் 47 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 295 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவரக்ளின் இல்லங்களுக்கே தேர்தல் அலுவலர்கள் நேரடியாகச் சென்று வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

ஒவ்வொரு நாளுக்கும் நன்றி... பிரியங்கா மோகன்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT