மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு ஐந்து உத்தரவாதங்களை அளித்தார்.
"மேற்கு வங்க மக்களுக்கு நான் ஐந்து உத்தரவாதங்களை அளிக்க விரும்புகிறேன், மதத்தின் அடிப்படையில் யாரும் இடஒதுக்கீடு பெற முடியாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை யாரும் தொட முடியாது. ராம நவமி கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது, சிஏஏ சட்டத்தை யாராலும் திரும்பபெற முடியாது." என்று தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், உச்ச நீதிமன்றத்தின் ராமர் கோயில் தீர்ப்பை ரத்து செய்வோம் என்று ராகுல் காந்தி கூறியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், சில நாள்களுக்குப் பிறகு ராமர் கோயில் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியதோடு, அவர்கள் சிஏஏவை "வில்லன்" ஆக சித்தரித்துள்ளனர் என்றும், சிஏஏ சட்டம் குடியுரிமையை வழங்குவதற்காக உள்ளது என்றும் கூறினார்.
திரிணாமூல் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் உள்ள இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாறிவிட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.