இந்தியா

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

DIN

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ம் தேதி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை மொத்தம் 16,21,224 பேர் தேர்வெழுதினர். அதில் 14,26,420 தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 87.98 ஆகப் பதிவாகியுள்ளது.

வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக 6.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு 0.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்கள் - வரலாறு, வழிபாடு, விழாக்கள்

எவரெஸ்டில் பனிப்புயல்: 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!

பழங்குடியின மக்களுக்காக..!” வாகன வசதிகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்!

Typhoon Matmo!” China-வைத் தாக்கும் கோரப் புயல்! 3,50,000 பேர் இடமாற்றம்!

பூந்தளிர்... ஆஷு ரெட்டி!

SCROLL FOR NEXT