முகப்பு
இந்தியா

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

தில்லி-கெய்ரோ தினசரி விமான சேவை - எகிப்து ஏர் அறிவிப்பு!

Updated On : 19 மே 2024, 8:30 pm IST
பகிர்:

புதுதில்லி: எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் போக்குவரத்தால் ஊக்குவிக்கப்பட்ட எகிப்து ஏர், தில்லி - கெய்ரோவை இணைக்கும் தினசரி விமானங்களை இயக்கப்போவதாக எகிப்து ஏர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் செயல்படத் தொடங்கிய எகிப்திய ஏர் கேரியர், கெய்ரோவிற்கு வாரத்திற்கு ஒன்பது விமானங்களைக் இயக்கி வருகிறது. அவற்றில் ஐந்து விமானங்கள் மும்பையிலிருந்தும், மீதமுள்ள 4 விமானங்கள் தில்லிருந்தும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தில்லியிலிருந்து கெய்ரோவுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும் என்று நம்புகிறோம் என்று நிறுவனத்தின் மேலாளர் அலி தெரிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து மேம்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லி-கெய்ரோ விமான சேவையை எகிப்து ஏர் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் ஏ320 நியோ விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதே வேளையில், மும்பை மற்றும் கெய்ரோவை இணைக்க போயிங் 737-8 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

எகிப்தை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், நாட்டிற்கு அதிகமான மக்களை ஈர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அலி. 1932ல் நிறுவப்பட்ட எகிப்து ஏர், எகிப்தின் தேசிய கேரியர் ஆகும். நிறுவனம் தனது 92 ஆண்டு செயல்பாட்டைக் குறிக்கும் வகையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கட்டணங்கள் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கும் தருவாயில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments