எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட போஸ்டர் எக்ஸ்/ஐஎன்சிஇந்தியா
இந்தியா

மோடி- அதானி இணைந்து இயக்கும்.. : காங்கிரஸின் வைரல் போஸ்டர்!

மோடி-அதானி பகடி போஸ்டர்கள்: காங்கிரஸ் வைரல் பதிவு!

DIN

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி இணைந்திருப்பது போலான பகடி போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.

படத்தின் போஸ்டர்கள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இவற்றில் மோடியும் அதானியும் ஒன்றாக இருப்பது போலான படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் படத்தில் ‘லுட் அஸ் இந்தியா’ தயாரிக்கும் கோல் மால் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. மற்றொரு படத்தில் ‘கொய்லா’ (நிலக்கரி) என்கிற படத்தை எல்ஐசி மற்றும் எஸ்பிஐ தயாரிப்பதாகவும் மோடி மற்றும் அதானி இயக்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் மோடியின் நெருங்கிய நண்பர் அதானி பல ஆண்டுகளாக தரக்குறைவான நிலக்கரியை மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையை அமைதியாக்க எத்தனை டெம்போக்களில் மோடி பணம் பெற்றார் எனக் கேட்டுள்ள ராகுல், ஜுன் 4-ம் தேதிக்குப் பிறகு முழுமையான விசாரணை நடத்த பெறும் எனவும் மக்களின் ஒவ்வொரு ரூபாயும் திரும்ப பெறப்படும் எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இந்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு வகையிலான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பயனர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT