கேரளத்தில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை..!
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் 8-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், நிகழாண்டு மே.30-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
கடந்த ஒரு வாரமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் சாலைகளையும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.