மத்தியப் பிரதேசத்தில் மணப்பெண்ணைக் கடத்த முயன்ற கும்பலைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கலு என்ற சலீம் கான் என்பவர், ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன் அதனை விடியோ எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், அந்தப் பெண், வேறொரு ஆணைத் திருமணம் செய்ய விரும்பியதைத் தொடர்ந்து, திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதனிடையே, திருமண நாளில் சலீம் கானும் அவருடைய கூட்டாளிகள் சிலரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.
பெண்ணின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சலீம்கான் கும்பல், பெண்ணின் குடும்பத்தினரையும், மாப்பிள்ளையின் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர். மேலும், அவர்கள் பெண்ணின் குடும்பத்தினரையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர்.
பெண்ணும் குடும்பத்தினரும் உதவிக்காகக் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, கூட்டம் திரண்டதால் சலீம் கானும் கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டியதாகவும் பின்னர் உள்ளூர் ஹிந்து அமைப்பின் தலையீட்டிற்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.