ஏர் இந்தியா விமானம் 
இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்களுக்கு இடையே.. ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பி

வெடிகுண்டு மிரட்டல்களுக்கு இடையே.. ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பி

DIN

துபையிலிருந்து தில்லி வந்த விமானத்தின், பயணிகள் இருக்கையில் இருக்கும் பாக்கெட்டில் வெடிமருந்து குப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக். 27ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து விமான நிலைய காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், அக்.27ஆம் தேதி துபையிலிருந்து தில்லி வந்த விமானத்தின், பயணிகளின் இருக்கையுடன் இணைந்த பாக்கெட் ஒன்றிலிருந்து வெடிமருந்து குப்பியை காவலர்கள் எடுத்துள்ளனர்.

விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பி எவ்வாறு வந்தது என்பது கேள்வியை எழுப்புகிறது.

கடந்த ஒரு சில வாரங்களாக, விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பல பிரச்னைகளை நிறுவனங்களும், விமானப் பயணிகளும் எதிர்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT