முகப்பு
இந்தியா

ரூ.5 கோடி கேட்டு மீண்டும் சல்மான் கானுக்கு மிரட்டல்!

ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 5 நவம்பர் 2024, 10:11 am IST
சல்மான் கான் - கோப்புப் படம்
பகிர்:

நடிகர் சல்மான் கானுக்கு ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல்காரர்கள் அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இதையும் படிக்க..: அமெரிக்க தேர்தல்: கடல்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா!

சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவரைக் கொன்று விடுவோம் என்று கூறியுள்ளார்.

மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.

கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த மிரட்டலில் தொடர்புடைள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க..: அமெரிக்காவின் வாக்குறுதிக்காக வாக்களியுங்கள்: கமலா ஹாரிஸ் வேண்டுகோள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments