உ.பி.யில் ஆட்டோ-லாரி மோதல்: 10 பேர் பலி!
ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்து பற்றி..
உத்தரப் பிரதேசத்தின் பில்கிராம் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,
ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம்-மாதவ்கன்ஞ் சாலையில் லாரியும், ஆட்டோவும் இருசக்கர வாகனத்தை மோதாமல் இருக்க விலகிச் சென்றபோது இந்த விபத்து நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் ஆறு பெண்கள், மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய லாரியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.