கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடக சாலை விபத்தில் 4 பேர் பலி!

மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

DIN

கர்நாடகத்தில் மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கர்நாடகத்தில் பார்கவ் கிருஷ்ணா என்பவர், தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (நவ. 9) அதிகாலையில் மரகுட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக மினிலாரி மீது கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில், காரில் பயணித்த பார்கவ் (55), அவரது மனைவி சங்கீதா (45), மகன் உத்தம் ராகவன் (28), கார் ஓட்டுநர் ஆகிய நால்வரும் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

விசாரணையில், அவர்கள் நால்வரும் கணகபுராவில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்கு சென்றிருக்கலாம் என்றும், கார் ஓட்டுநர் குறித்த விவரங்கள் மட்டும் அறியப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT