தில்லியில் காற்று மாசு 
இந்தியா

அதிகரிக்கும் மாசு: ஆம் ஆத்மியை கண்டித்து முகக்கவசம் விநியோகித்த பாஜகவினர்!

ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசினால் தேசிய தலைநகரம் பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுவைக் கண்டித்து பாஜகவினர் மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா,

ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசினால் தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதற்கு அவர்களின் மோசமான பணியே காரணம் என்று கூறினார்.

தில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு மோசமாகி வருகின்றது. தில்லி அரசின் ஆட்சியால் அங்குள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். மாசைக் கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சாபில் குப்பைகள் எரிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். அதிகபடியான மாசுக்கு காரணம் தில்லி அரசின் மோசமான பணியே காரணம். ஆனால் மக்கள் இதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டின்படி காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருப்பதால் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வாலுடன் இணைந்து மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி தலைநகரின் பல பகுதிகளில் அடர்த்தியான புகைமூட்டம் சூழ்ந்தது மற்றும் காற்றின் தரநிலை குறியீடு 483 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் உள்ளதால் 10 மற்றும் 12ம் வகுப்புகளைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்தி வைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பயிற்சி ஆன்லை்னில் மட்டுமே நடத்தப்படுகிறது.

மேலும், தலைநகருக்கு எலக்ட்ரிக் மற்றும் டீசல் டிரக்குகள் மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய சேவைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை தவிர, மற்ற இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

அதிமுக இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் ஹார்ட் பீட் தொடர் நடிகை!

புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 வரிசை பைக்குகள்!

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

SCROLL FOR NEXT