இந்தியா

ரூ. 20 லட்சம் அளித்தால் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம்! ஸொமாட்டோ சிஇஓ அறிவிப்பு!

தலைமை ஊழியர் பணிக்கு நன்கொடையாக ரூ. 20 லட்சம் அளித்தால், 2ஆம் ஆண்டு முதல் ரூ. 50 லட்சம் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு

DIN

ஸொமாட்டோவில் தலைமை ஊழியருக்கான வேலைவாய்ப்பை அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

இ-வர்த்தக நிறுவனமான ஸொமாட்டோவில் தலைமை ஊழியருக்கான பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அறிவித்தார். இந்த நிலையில், வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான 24 மணிநேரத்திலேயே 10,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பில் தீபிந்தர் தெரிவித்ததாவது, ``இந்த பதவிக்கு நன்கொடையாக விண்ணப்பதாரர்கள் ரூ. 20 லட்சம் அளிக்க வேண்டும். இருப்பினும், அந்த நன்கொடையினை ஃபீடிங் இந்தியாவுக்கு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிக அனுபவம் வாய்ந்தவராக இருக்கக் கூடாது. ஆனால், தகவல்தொடர்பில் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இந்த பணியில் முதல் வருடத்திற்கு ஊதியம் இல்லை; இரண்டாம் ஆண்டு முதல் வழக்கமான சம்பளம் அளிக்கப்படும்.

வழங்கப்படும் ஊதியமும் நிச்சயமாக ரூ. 50 லட்சத்திற்குமேல் இருக்கும். ஆனால், 2ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே இதுகுறித்து பேசப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நல்ல ஊதியம் பெறும் நோக்கத்திற்காக மட்டும் விண்ணப்பிக்காமல், இந்த பணி வழங்கும் கற்றல் வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ டேட்டாவைப் பகிர வேண்டிய அவசியமில்லை. ஆனால் d@zomato.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 200 வார்த்தைகள் கொண்ட கவர் லெட்டரை மட்டுமே மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்’’ தீபிந்தர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT