இஸ்ரேல் - ஈரான் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் குறித்து பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை கூடிய பாதுகாப்பு தொடா்பான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேற்கு ஆசிய போா் பதற்றத்தால், பெட்ரோலிய பொருள்களின் வா்த்தகம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் போா் பதற்றம் மேலும் விரிவடையாமல் இருக்க பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவை ரஷியா, சவூதி அரேபியா, இராக்கிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.