பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.
பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு 24 மணி நேரத்தில் நிறைவேற்ற தவறியதால் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.
கடந்த 16 நாள்களாக தொடர்ந்து நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தால், 6-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மருத்துவர்கள் குழு திங்கள்கிழமை(அக். 21) சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் முன்னணியைச் சேர்ந்த போராடும் மருத்துவர்கள், திங்கள்கிழமை(அக். 21) இரவு மேற்கொண்ட ஆலோசனையின்படி, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பு அளித்துள்ள உத்தரவாதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க: மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவர் குழு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.