கான்பூரில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்த இடத்தில் காவல்துறை மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்தியா

கான்பூரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, ஒருவர் காயம்!

உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

DIN

கான்பூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரில் வியாழக்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கான்பூர் ஏடிசிபி முகேஷ் குமார் கூறியதாவது:

தீபாவளி என்பதால் கான்பூர் சிசாமாவ் பகுதியை சேர்ந்த சுரேந்திரா தனது காரில் சமையல் எரிவாயு உருளை கொண்டு வந்துள்ளார். தனது வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்து சமையல் எரிவாயு உருளையை இறக்கும்போது அது வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில், சுரேந்திரா சம்பவ இடத்திலேயே பலியானார், பலத்த காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் காரின் கண்ணாடி உடைந்துள்ளது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

சமையல் எரிவாயு உருளை வெடித்து ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து அவமதித்தார்! இயக்குநர் மீது திவ்ய பாரதி குற்றச்சாட்டு!

மெட்ரோ, எஸ்ஐஆர், நிதி நிராகரிப்பு... அனைத்துக்கும் எதிராக தமிழ்நாடு போராடும்: முதல்வர்

சேலத்தில் டிச. 4-ல் தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஏன்?

நூறாவது டெஸ்ட் போட்டியில் 100*.. சாதனை படைத்த முஷ்ஃபிகுர் ரஹிம்!

நுவாபாடா எம்எல்ஏவாக பதவியேற்றார் ஜெய் தோலாகியா!

SCROLL FOR NEXT