முகப்பு
இந்தியா

ரீல்ஸ் மோகத்தால் மகன் உள்பட மூவர் பலி!

ரயில் பாதையில் நின்று விடியோ எடுத்ததால் நேர்ந்த பரிதாபம்

Updated On : 11 செப்டம்பர், 2024 at 4:39 PM
பகிர்:
Updated On : 11 செப்டம்பர், 2024 at 4:28 PM

ரயில் பாதையில் நின்று விடியோ எடுத்தவர்கள் மீது ரயில் மோதியதில் மூவர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லகிம்பூரில் முகமது அகமது என்பவர், தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் சேர்ந்து, ரீல்ஸ் மோகத்தால், ரயில் பாதையில் நின்று விடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த பயணியர் ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்வாலி காவல் பொறுப்பாளர் அஜீத் குமார், உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.