இந்தியா

வக்ஃப் சட்ட விதிமுறைகளை வகுக்க தாமதம்: மத்திய சிறுபான்மையினா் நலத்துறைக்கு மாநிலங்களவைக் குழு அழைப்பாணை

வக்ஃப் சட்டத்தின் கீழ் துணைச் சட்டம் வகுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கமளிக்க மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அதிகாரிகளுக்கு மாநிலங்களவைக் குழு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

Din

வக்ஃப் சட்டத்தின் கீழ் துணைச் சட்டம் வகுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கமளிக்க மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அதிகாரிகளுக்கு மாநிலங்களவைக் குழு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு "வக்ஃப்' சொத்துகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இந்தச் சொத்துகளை நிர்வகிக்கும் சட்டபூர்வ நிறுவனமாக மாநில வாரியாக வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

இந்நிலையில், மாநில வக்ஃப் வாரியங்களுடன் மத்திய வக்ஃப் கவுன்சில் அமைத்தல், வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வதில் சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், வக்ஃப் சட்டம் 2013-இன் கீழ் துணைச் சட்டம் வகுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கமளிக்க அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு, மத்திய சிறுபான்மையினர் நலத் துறைச் செயலர் மற்றும் பிரதிநிதிகளுக்கு மாநிலங்களவை துணைச் சட்டக் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதேபோல கண்டோன்மென்ட் சட்டம் 2006-இன் கீழ் துணைச் சட்டம் வகுப்பதில் நீடிக்கும் தாமதம் குறித்து விளக்கமளிக்க அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அந்தக் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஒரு சட்டம் தொடர்பான துணைச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உரிய நேரத்தில் வகுக்கப்படுகிறதா? அவை அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் துணைச் சட்டக் குழுக்கள் உள்ளன.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT