குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் விருது பெற்ற செவிலியர்கள்  
இந்தியா

செவிலியர்களுக்கு ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’: குடியரசுத் தலைவர் வழங்கினார்!

சிறந்த சேவையைப் பாராட்டி 15 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார்.

DIN

சமூகத்திற்கான கடமை மற்றும் சேவையில் சிறந்த அர்ப்பணிப்புக்காக 15 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை விருது வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செவிலியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, இந்தப் பாராட்டு செவிலியர்களுக்கு பொது சேவை பணியாற்ற ஊக்குவிக்கும் என்றும், செவிலியர்கள் "சுகாதாரத் துறையின் முதுகெலும்பு" என்றும் கூறினார்.

தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது, 1973 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், செவிலியர்கள், சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்டது.

மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மருத்துவமனை அல்லது சமூக அமைப்புகள், கல்வி அல்லது நிர்வாக அமைப்பில் வழக்கமான வேலையில் இருக்கும் செவிலியர் தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு தகுதியானவர்.

செவிலியர்களுக்கு விருதுடன், சான்றிதழ், ரூ.1,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

SCROLL FOR NEXT