இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
இந்தியா

ராம நவமி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து.

DIN

ராம நவமி திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,”அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள். எப்போதும் ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் நம் மீது நிலைத்திருக்கட்டும். அனைத்து முயற்சிகளிலும் நம்மை அவர் வழிநடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”நாட்டு மக்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள். இந்த திருநாள் மதம், நீதி மற்றும் கடமை பற்றிய செய்தியை நமக்கு தெரிவிக்கிறது.

ஸ்ரீராமர் மனிதகுலத்திற்கு தியாகம், அர்ப்பணிப்பு, நல்லிணக்கம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் உயர்ந்த லட்சியங்களை வழங்கியுள்ளார். அவரது நல்லாட்சி, அதாவது ராமராஜ்யம் என்ற கருத்து சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?


நாடு முழுவதும் ராம நவமி திருநாள் ஞாயிற்றுக்கிழமை விமா்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று, ராமா் கோயிலில் தரிசன நேரத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT