இந்தியா

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயா்ந்துள்ளது.

Din

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,033 கோடியாக உள்ளது.இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,969 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.37,923 கோடியில் இருந்து 7.9 சதவீதம் அதிகரித்து ரூ.40,925 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளத்தில் விபத்தில் சிக்கிய மணப்பெண்: மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

ராஜமௌலியின் வாரணாசி படத்தில் 6 பாடல்கள்!

மீனவர்களுக்கு நெருக்கமானது திராவிட மாடல் அரசு! முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

SCROLL FOR NEXT