நிஞ்சா 650 பைக் நன்றி - கவாஸகி
இந்தியா

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி நிறுவனம்.

DIN

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரேஸ் வாகனங்களுக்கு புகழ்பெற்ற கவாஸகி நிறுவனம் நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.7.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் பைக்கைவிட ரூ.11,000 அதிகமாகும்.

அதே மாடலில் இருந்தாலும், இந்த வகையில் நிறம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் 649cc கொண்டதாகவும், இரட்டை லிக்விட் கூல்ட் இன்ஜின், 67 குதிரைத்திறன் கொண்டதாகவும், ஒரு நிமிடத்திற்கு 6700 முறை சக்கரம் சுழலும் வகையில் 64nm முடுக்குவிசைத் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 வரையிலான கியர் பாக்ஸும் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 41 மில்லிமீட்டர் டெலஸ்கோபிக் போர்க்ஸும், பின்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சஸ்பென்ஸன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 196 கிலோ கிராம் எடையுடன் 15 லிட்டர் பெட்ரோல் டேங்கும் உள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சமாக 4.3 அங்குல டிஎஃப்டி திரை அமைக்கப்பட்டுள்ளது.

இது டிரையம்ப் டேட்டோனா 660 பைக்கிற்கு போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது நிஞ்சா பைக்கின் விலை குறைவுதான். டிரையம்ப் டேட்டோனா 660 ரூ.9.72 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ஓப்போவுக்கு போட்டியாக விவோ அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT