FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பஹல்காம்: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!

பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

30 ஏப்ரல் 2025, 1:46 pm IST
அலோக் ஜோஷி
பகிர்:

பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று(புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

சற்று நேரத்திற்கு முன்னர் இந்த கூட்டம் முடிவடைந்ததையொட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராணுவப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கு விமானப் படையின் முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு ராணுவ முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், முன்னாள் கடற்படை அதிகாரி மோன்டி கன்னா,

இந்திய காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ராஜீவ் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங் ஆகியோர்

ஐ.எஃப்.எஸ். பதவியிலிருந்து ஓய்வு பெட்ரா பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் இந்த குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments