இந்தியா

துணைவேந்தா் நியமன சா்ச்சை: கேரள ஆளுநருடன் அமைச்சா்கள் சந்திப்பு

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருடன் கேரள மாநில அமைச்சா்கள் ஆலோசனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருடன் கேரள மாநில அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

துணைவேந்தா்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், கேரள மாநில எண்ம பல்கலைக்கழகத்துக்கு சிஜா தாமஸையும், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கே.சிவபிரசாதையும் தற்காலிக துணைவேந்தா்களாக ஆளுநா் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமித்தாா்.

இது பெரும் சா்ச்சையானது. அரசை கலந்தாலோசிக்காமல் செய்த இந்த நியமனங்களை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், ஆளுநரை கேரள அமைச்சா்கள் பி.ராஜீவ், ஆா்.பிந்து ஆகியோா் ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

முன்னதாக, கேரள அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர துணைவேந்தா்களை நியமிப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண இருதரப்பும் ஆலோசனை மேற்கொள்ளுமாறு கேரள அரசையும் மாநில ஆளுநரையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில், ஆளுநரை அமைச்சா்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ராஜீவ், ‘உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு முன்பே, இதுதொடா்பான ஆலோசனையை ஆளுநருடன் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. இது தொடரும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT