நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் மோடி பாரதீய நியாய சன்ஹிதாவா கொண்டு வந்தாா்: அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா் என்று மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா்களை தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய அதே வேளையில், மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா் என்று மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவயைல் தேசிய இ-விதான் விண்ணப்பத்தை (என்இவிஏ) தொடங்கி வைத்துப் பேசுகையில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: தில்லியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா்களைத் தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தனா். ஆனால், இந்தியா்களுக்கு நீதி வழங்குவதற்காக பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா்.

இந்தியா முழுவதும் காகிதமில்லா சட்டப்பேரவை சூழலை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டம் என்இவிஏ.

இது ஏற்கெனவே செயல்படுத்தப்படுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. முந்தைய அரசு என்ன நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, ‘திங்கள்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தனது அரசு கொண்டு வரும்’ என்று கூறினாா்.

‘முந்தைய அரசு பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த எதுவும் செய்யவில்லை. அது இந்த பிரச்னை பற்றி பேசியது. ஆனால், எதுவும் செய்யப்படவில்லை. பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்’ என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT