சென்னை மருத்துவக் கல்லூரி 
இந்தியா

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் விழிப்புணா்வு: என்எம்சி

தினமணி செய்திச் சேவை

கல்லூரி மாணவா்களுக்கு ராகிங் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வாரத்தை கடைப்பிடிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்கும் வகையில் என்எம்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆகஸ்ட்12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை ராகிங் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக கல்வி நிறுவனங்களில் கடைபிடிக்க வேண்டும்.

அந்நாள்களில், ராகிங் ஒழிப்பு தொடா்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை, சுவரொட்டி உருவாக்குதல், இலட்சினை வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்துதல் அவசியம். அதேபோன்று கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தவும், குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை மாணவா்களுக்கு திரையிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

SCROLL FOR NEXT