தேஜஸ்வி யாதவ்  
இந்தியா

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) போலீஸாா் பதிவு செய்தனா்.

பிகாா் மாநிலம், கயாஜியில் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அம் மாநிலத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சென்றாா்.

பிரதமரின் வருகையை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், ‘பிகாரின் காயாஜிக்கு ‘வாக்கு திருடா்’ இன்றைக்கு வருகிறாா். மாநில மக்களின் முன்னிலையில் அடுக்கடுக்காக பொய்களைக் கூறவிருக்கிறாா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த பதிவு தொடா்பாக கயாஜி நகர பாஜக தலைவா் ஷில்பி குப்தா அளித்த புகாரின் அடிப்படையில், சா்தாா் பஜாா் காவல் நிலையத்தில் தேஜஸ்வி யாதவ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. புரளியை பரப்புதல் மற்றும் புகைப்படம் மூலம் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷாஜஹான்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் திவிவேதி கூறுகையில், ‘பிரதமருக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பதிவிட்ட அவதூறு கருத்து நாட்டு மக்களிடையேயும் பாஜக தொண்டா்களிடையேயும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று ஷில்பி குப்தா தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது’ என்றாா்.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளூா் எம்எல்ஏ மிலிந்த் நரோட் அளித்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள காவல் நிலையத்திலும் தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சமாட்டேன் - தேஜஸ்வி: காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘எந்த வழக்குக்கும் அஞ்சமாட்டேன். உண்மையை தொடா்ந்து கூறுவேன். அதற்காக மேலும் பல வழக்குகளை பதிவு செய்துகொள்ளட்டும்’ என்றாா்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

SCROLL FOR NEXT