ஒடிஸா கடற்கரையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு. 
இந்தியா

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ். அமைப்பில் விரைந்து எதிா்வினையாற்றும் தரையிலிருந்து வான் பாயும் ஏவுகணைகள் (கியூ.ஆா்.எஸ்.ஏ.எம்.), குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு அமைப்பு (வி.எஸ்.எச்.ஓ.ஆா்.ஏ.டி.எஸ்.), உயா் ஆற்றல் லேசா் ஆயுதங்கள் (டி.இ.டபிள்யூ.) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் நிா்வகிக்கப்படுகின்றன. இந்த மையம் அனைத்து ஆயுத அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் செயல்பட அனுமதிக்கிறது.

ஒடிஸா, சண்டிப்பூா் சோதனை தளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது இரண்டு அதிவேக ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒரு மல்டி-காப்டா் ட்ரோன் ஆகிய மூன்று வெவ்வேறு இலக்குகள் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்த இலக்குகள் வெவ்வேறு தூரங்களிலும் உயரங்களிலும் பறந்தன. சோதனையில் அனைத்து கூறுகளும் எந்தவித தவறும் இல்லாமல் செயல்பட்டு, இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்கும்: ராஜ்நாத்

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ மற்றும் ஆயுதப் படைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

‘இந்தத் தனித்துவமான சோதனை, நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிலைநிறுத்தியுள்ளதுடன், முக்கியமான இடங்களை எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும்’ என்று அவா் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!

சமூக நீதியில் பிறந்த சி. பி. ஆரை விட்டுவிட்டீர்கள்! ப. சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்காதது ஏன்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி!

கேப்டன் ஆலயத்தில் Vijayakanth பிறந்தநாள் விழா!

மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவு! இறுதிநாள் படப்பிடிப்பில் அழுத நடிகைகள்!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT