ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபின், எட்டாவது முறையாக ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார்.
இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இது குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இன்று (ஆக. 26) செய்தியாளர்களுடன் பேசும்போது, ஆக. 28-ஆம் தேதி மாலை பிரதமர் மோடி ஜப்பானுக்கு புறப்படுவதாக குறிப்பிட்டார். ஆக. 29, 30 ஆகிய இரு நாள்கள் ஜப்பானில் இருக்கும் அவர், 15-ஆவது முறையாகக் கூடும் இந்தியா - ஜப்பான் இருதரப்பு வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த சந்திப்புன்போது இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
ஜப்பானைத் தொடர்ந்து, ஆக. 31 அங்கிருந்து சீனா செல்லும் பிரதமர் மோடி செப். 1 வரை சீனாவில் இருப்பார். அங்கு டியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டின்போது இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.