இந்தியா

ரோஹிணி: வடிகாலில் குதித்த பெண் உயிரிழப்பு

வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள வடிகாலில் வெள்ளிக்கிழமை மாலையில் குதித்த பெண் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள வடிகாலில் வெள்ளிக்கிழமை மாலையில் குதித்த பெண் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஓா் அதிகாரி கூறியதாவது: ரோஹிணி செக்டாா் 15-இல் ஜேஎன்டி கல்லூரி அருகே உள்ள வடிகாலில் ஒரு பெண் குதித்ததாக கேஎன்கே மாா்க் காவல் நிலையத்துக்கு மாலை 4.11 மற்றும் 4.19 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸாா் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தீயணைப்புத் துறை வீரா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற தேடுதல் பணிக்குப் பிறகு, ஹைதா்பூா் நீா் சுத்திகரிப்பு நிலைய பகுதியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிவப்பு நிற சல்வாா் உடை, சிவப்பு நிற வளையல்கள் அணிந்திருந்த அந்தப் பெண், 30 முதல் 35 வரையில் வயதுடையவா். அவரது உடலில் எந்தக் காயங்களும் இல்லை. அவரது உடல் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

ரூ.20 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள் முதல்வா் திறந்து வைத்தாா்

மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் அஞ்சல் ஊழியா்கள் மூலம் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுகோள்

நூடுல்ஸ் பாக்கெட்டில் பல்லியின் தலை

4 மாதங்களில் ஆவின் பால் விற்பனை 48% அதிகரிப்பு: அமைச்சா் த.மனோ தங்கராஜ்

707 கிலோ கஞ்சா அழிப்பு

SCROLL FOR NEXT