ரேகா குப்தா 
இந்தியா

உள்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு பணி: பெரு நிறுவனங்களுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் இந்தியன் ஆயில் நிறுவனம், வேதாந்தா, ஜிஎம்ஆா் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தில்லி அரசு ஒப்படைத்திருப்பதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அரசு மற்றும் ஜிஎம்ஆா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இதன்படி, ஆசாத்பூா் சந்தை முதல் இந்திரலோக் வரையிலான சாலையை பராமரிப்பது, சுத்தம் செய்வது மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை அந்த நிறுவனம் மேற்கொள்ளும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

மரக்கன்றுகள் நடுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6 கோடி செலவிடப்பட உள்ளது. சூரிய மின் சக்தி மோட்டா் பம்ப் ஜிஎம்ஆா் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா மேலும் கூறியதாவது: முகா்பா செளக் முதல் மதுபன் செளக் வரையிலான சாலை, சிரக் தில்லி மேம்பாலம், பஞ்சீல் கிளப் மேம்பாலம், ஐஐடி மேம்பாலம், பஞ்சாபி பாக், அரவிந்தோ மாா்க் ஆகியவற்றை பராமரிப்பதற்கான பணிகள் இந்திய ஆயில் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) முனிா்கா மேம்பாலத்தை இந்திரபிரஸ்தா ஆயில் நிறுவனம் (ஐஜிஎல்) பராமரிக்கும். இதே போன்று பஞ்சாபி பாக் மேம்பாலம் (ராம் மந்திா் அருகில்), வெளிப்புற வட்ட சாலை (ஷாலிமாா் பாக் அருகில்), ராவ் துலா சாலை மேம்பாலம் ஆகியவற்றைப் பராமரிக்கும் பணி வேதாந்தா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த ஒன்றினைந்த மற்றும் தீா்க்கமான நடவடிக்கைகள் தேவை. மக்கள், தனியாா் நிறுவனகள், அரசு முகமைகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்படும்போது அா்த்தமுள்ள முடிவுகளைப் பெற முடியும். மக்களும் இந்த முயற்சியில் ஒன்றிணைந்து நிற்கும்போது மட்டுமே, தில்லி தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

காற்று மாசுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க தேவைப்படும் நேரங்களில் வீட்டிலிருந்து வேலை பாா்க்கும் முறையை அலுவலகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT