கொல்கத்தாவில் மெஸ்ஸி படம் | ஏஎன்ஐ
இந்தியா

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா செய்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை:

கொல்கத்தாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த அரூப் பிஸ்வாஸ் ராஜிநாமா செய்தார்.

சால்ட் லேக் திடலில் கடந்த சனிக்கிழமை காலை லயோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியை முக்கியப் பிரமுகா்கள், பாதுகாப்புப் படையினா் சூழ்ந்துகொண்டதாலும், மைதானத்தைவிட்டு அவா் விரைவாகப் புறப்பட்டதாலும் ஏற்பட்ட விரக்தியில் ரசிகா்கள் வன்முறையில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்ச்சியின் நிா்வாகச் சீா்கேட்டுக்காக வருத்தம் தெரிவித்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆஷிம் குமாா் ரே தலைமையில் உயா்நிலை விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், தேசிய அளவில் அதிர்வலைகளைக் கிளப்பிய இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று, மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த அரூப் பிஸ்வாஸ் ராஜிநாமா கடிதத்தை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியிடம் சமர்ப்பித்தார். அதனை அவர் ஏற்றுக்கொண்டதாக இன்று(டிச. 16) முதல்வர் அலுவலகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Messi event fiasco: Two days after widespread spectator rampage marred a marquee football event featuring Argentine legend Lionel Messi at the Salt Lake stadium, Chief Minister Mamata Banerjee on Tuesday accepted the sports minister's resignation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: 6 ஆண்டுகளாக தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

வளா்ப்பு நாய்களுக்கு காலக்கெடு முடிந்தாலும் உரிமம் பெறலாம்

தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்புக் குழு உறுப்பினா் சந்திப்பு

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT