கோப்புப் படம் 
இந்தியா

தில்லி காற்று மாசு : 11 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆம் ஆத்மியே காரணம்: பாஜக

தில்லி காற்று மாசுபாட்டிற்கு 11 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நிர்வாகமே காரணம் என துணை நிலை ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி காற்று மாசுபாட்டிற்கு 11 ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நிர்வாகமே காரணம் என துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியின் வளர்ச்சிக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததற்கும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 413 ஆக இருந்தது. குறிப்பிட்ட இடங்களில் மிகவும் மோசம் என்ற பிரிவில் காற்றின் தரம் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தில்லியின் காற்றின் தரம் மோசமடைந்ததற்கு 11 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த ஆம் ஆத்மியே காரணம் என துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா குற்றம் சாட்டியுள்ளார்.

காற்று மாசுபாட்டிற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பொறுப்பேற்க வேண்டும் வி.கே. சக்சேனா எழுதியுள்ள கடிதத்தில்.

கடந்த 11 ஆண்டுகாலமாக தில்லியின் முதல்வராக நீங்கள் (அரவிந்த் கேஜரிவால்) இருந்தீர்கள். உங்கள் ஆட்சியில் அரசியல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கான விதிகளை மீறிவிட்டீர்கள். காற்று மாசுபாடு குறித்து கேள்வி எழுப்பும்போதெல்லாம், அதற்கு அத்தனை முக்கியத்துவம் தராதீர்கள் எனக் கூறினீர்கள். ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு பேசுபொருளாகிறது. 15 - 20 நாள்கள் மீடியாக்கள் இதனை விவாதம் செய்யும். சமூக ஆர்வலர்களும் நீதிமன்றமும் இதனைப் பிரச்னையாக்கும். பிறகு அனைவரும் இதனை மறந்துவிடுவார்கள் எனக் குறிப்பிட்டீர்கள் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லியின் உள்கட்டமைப்பு சரிவர மேம்படாமல் இருப்பதற்கும் கேஜரிவாலே காரணம் என சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ள அவர், தில்லியில் 55 பள்ளிகள் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், அது நடந்ததா? 11 ஆண்டுகாலத்தில் புதிய மருத்துவமனைகளை உங்கள் ஆட்சி கொண்டுவரவில்லை. இறுதி 5 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தீர்கள். இவற்றுக்காக ரூ. 600 கோடி செலவிட நீங்கள் தயாராக இல்லை. ஆனால் விளம்பரத்துக்காக மட்டும் ரூ. 2,500 கோடி வரை செலவிட்டுள்ளீர்கள் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

11 years of AAP responsible for Delhi air situation LG VK Saxena writes scathing letter to Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மொழி - ஒரே நாமம் என்பது நடக்கவே நடக்காது: கமல்ஹாசன் எம்.பி.

அரசு மருத்துவமனையில் குளிா்சாதனப் பெட்டி விழுந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பணியில் ஒழுங்கீனம்: இரு காவல் ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

தேச பாதுகாப்புக்கு மக்கள் பங்கேற்பே முக்கியம்: திரௌபதி முா்மு

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

SCROLL FOR NEXT