தில்லியில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் பெண்கள், சிறுமிகள் உள்பட 23,300-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக, காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
தில்லியில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், 23,340 பேர் மாயமாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 14,166 பெண்கள் (61 சதவிகிதம்) மற்றும் 9,174 ஆண்கள் (39 சதவிகிதம்) மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாயமானவர்களில் 8,672 பெண்கள் மற்றும் 5,713 ஆண்கள் என மொத்தம் 14,385 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், டிச.15 ஆம் தேதி நிலவரப்படி, 5,494 பெண்கள் மற்றும் 3,461 ஆண்கள் என 8,955 பேர் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4,146 சிறுமிகள் (73 சதவிகிதம்) மற்றும் 1,571 சிறுவர்கள் (27 சதவிகிதம்) என மொத்தம் 5,717 குழந்தைகள் 2025 ஆம் ஆண்டில் மாயமாகியுள்ளனர். இதில், 3,019 சிறுமிகள் மற்றும் 1,193 சிறுவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தில்லியில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,752 பெண்கள் மற்றும் 10,141 ஆண்கள் உள்பட 24,893 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில், 9,633 பேர் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.