இந்தியா

வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்கியது.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்கியது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திரா பிரதான், எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சுமார் 2,400 பேர் பங்கேற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாசார விழா, நாட்டின் மிகத் தொன்மையான இரண்டு ஆன்மிக வளம் கொண்ட பகுதிகளான காசியையும், தமிழ்நாட்டையும் ஒன்றிணைத்து, நிலப்பரப்பைக் கடந்து ஆழ்ந்த நாகரிகப் பிணைப்பை வளா்ப்பதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியிருந்தார்.

காசி- தமிழ்நாடு இடையேயான ஒற்றுமை தேசத்தின் ஒற்றுமையாகும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT