இந்தியா

புத்தாண்டு: தாஜ்மஹாலில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

DIN

புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் முக்கிய அடையாளமான உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

புத்தாண்டை வரவேற்கும்விதமாக பலரும் குடும்பத்தினருடன் சென்று தாஜ்மஹாலை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

கடந்த டிசம்பரில் சராசரியாக நாள்தோறும் 40,000 பேர் தாஜ்மஹாலை பார்வையிட வந்துள்ளனர். புத்தாண்டு அன்று கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏற்கெனவே அங்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT